​(பொன்னடி சேர்ப்பாயா?….)

வேதம் போற்றும் வித்தகன் உன்−

பாத கமலங்கள் பற்றிடவே,

பாதை அறியாதிருந்தாலும், என்−

தாதை நீயென உணர்ந்திருந்தேன்!
ஒப்பார் உனக்கே இல்லை என்றார்;

மிக்காரும் இல்லாத மாயனென்றார்; 

அப்பேர்பட்டவன் என்றாலும், நான்−

தப்பாது உன் துணை வேண்டி நின்றேன்!
நான்மறை காணா நாயகன் நீ;

வான் உறைவோர்க்கும் அரியவன் நீ; எனது

ஊனுயிரும் உனது என்பதனால்−

உன்னடி நானும், ஏத்தி நின்றேன்!
துரும்பிலும், தூணிலும் பரந்தவன் நீ;

அரும்பும் உயிர்க்கும், ஆதாரம் நீ; மறு

கருவறை  அமையாதிருந்திடவே−

மாயனே, உன் வாசல் வந்து நின்றேன்!
கதறிய களிறையும் காத்தவன் நீ;

கண் இணையால், கலி முறிப்பவன் நீ;

பதறியே வந்தேன், பரந்தாமா,எனை−

பாலித்துன், பொன்னடி சேர்ப்பாயா?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s