​மான்ஸரோவர்……(4)

என் எண்ணத்தில் நிறைந்தவள் நீ தானே;

என் இரு கரம் அணைத்தது உனை தானே;

என் உயிர் இருப்பதும், உனில் தானே;

பின், ஏனடி எனக்கிந்த நிலை மானே?
புன்னை மரத்தடி, பாவை உனையடி,

பார்க்கவே வந்தது மறந்தாயோ?

என்னை மறந்துமே,உந்தன் மடியினில்,

கிடந்த இக்கண்ணனை, வெறுத்தாயோ?
சின்னம் பதித்திட, கன்னம் சிவந்த, நல்−

காதல் பொழுதுகள் மறந்தாயோ?

முன்னம் மயங்கியே, மார்வமே சாய்ந்த, என்−

மங்கையே, நீ எனை வெறுத்தாயோ?
ஊரும் உறங்கிட, உறங்காத நெஞ்சத்தை

உறவாட வைத்தது மறந்தாயோ?

பேரும் மறந்தொரு பித்தனாய் தொடரும், 

இப் பாவியை, நீயும் வெறுத்தாயோ?
கார்வான மேகம் கீழ், கரம் கோத்து களித்த, அக்−

காலங்கள் நீயும் மறந்தாயோ?

பார்வையை பரிசாக, பாவையை யாசிக்கும்,

யாதவனை நீ, வெறுத்தாயோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s