​(111) நாச்சியார் மறுமொழி…

பிரிந்தே அவனை, துடிக்கின்றாய்!

பிறக்கும் நொடிதொறும், நினைக்கின்றாய்!

பேதைப் பெண்ணே, தேவையில்லாமல்−

பின்னும், ஏன் நீ நோகின்றாய்?
சிந்தும் கண்ணீர் கன்னம் வழிந்தால்−

சோதை மகன் அதை சகிப்பானா?

தந்து உன் மனதை, தோளும் சாய்ந்தால்−

தனிமையில், உன்னை விடுவானா?
அவனின் கரங்கள் சேர்வது இன்பம்;

அவனுள், உன்னைக் காண்பதும் இன்பம்;

அவனும், உன்னில் கலந்தால் இன்பம்;

அவனே நீயாய், ஆவதே இன்பம்!
மண்ணில் நீர் போல், கலந்து விட்டாலே−

மாதவன் உன்னின் உடைமை தானே!

பெண்ணின் பெருமை, பொறுமையில் தானே?

புரிந்தே அவனை, சரணடை மானே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s