​(3)  மான்ஸரோவர்….

கலங்கினேன் தேவியே;

கருணையே இல்லையோ?

கதறும் என் ஆவியை,

காக்கும் வழி என்னவோ?
இனியுமே தாமதம் 

ஏனடி என் சகி?

எதிரிலே வந்து நீ, 

என் முன்னே நில்லடி;
தனிமையின் பிடியினில் 

நீயும் ஏன் பைங்கிளி?

தாங்கிட நானுளேன்,

தவிக்கவும் வேணுமோ?
விண்ணின் மீன் ஆயிரம்,

ஈடுதான் செய்யுமோ?

வெண்மதி வெளிச்சமே,

இவைக்கு இணையாகுமோ?
பெண்ணிலே, வெண்மதி−

பாவையே நீயடி;

உன்னிலே, என் உள்ளம்

ஒளிந்ததை நினையடி!
வீணில் ஏன் கோபமோ,

வஞ்சியே, சொல்லடி!

வானை விட்டு நிலவுக்கு,

வேறு பாதை ஏதடி?
ஆதலால், என்னிடம்

அடைக்கலம் கொள்ளடி;

அன்பிலே, உன்னை நான்−

ஆள வந்தேனடி!
ஒளிந்து நீ, என்னையும்

அலைக்கழிப்பதேனடி?

கனிந்து, என் கண்ணிலே

காட்சியே அளியடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s