​(6) மான்ஸரோவர்…..

(இன்றிலிருந்து ராதை, கண்ணனுக்கு, பதில் அளிப்பதாக பதிவு..)
எனக்கான உன் நெஞ்சில்,

ஏன் தந்தாய், பங்கு?

என் எதிரில் நின்று நீயும்−

செய்ததென்ன அங்கு?
என் விழிகள் இரண்டும் பார்க்க,

உன் விரல் கோர்த்தாள் ஒருத்தி;

என் அகமே கொதித்திருக்க,

ஆட அழைத்தாள் ஒருத்தி;
உன், அதர அமுதம் கேட்டு,

அடம் பிடித்தாள் ஒருத்தி;

உன் அகன்ற மார்வில் சாய,

ஆசை கொண்டாள் ஒருத்தி;
உன் கேசக் கற்றை கலைத்து,  

கண் பொத்தினாள் ஒருத்தி;

உன் சுவாஸக் காற்றை வாங்கி,

உயிர் தரித்தாள் ஒருத்தி;
உன் இடையில் கையும் வைத்து, 

இழுத்துச் சென்றாள் ஒருத்தி;

உன் இதயம் தன்னதென்று

இறுமாந்தாள் ஒருத்தி!
இத்தனையும் கண்ட இந்த− 

பெண் நிலையும் என்னாகும்?

மொத்தமாய் உனை இழந்தது போல்,

மனமதுவும் புண்ணாகும்!
உன்னை எந்தன் உயிராக−

உணர்ந்திருந்தேன் எக்காலும்;

உனக்கு என் மேல் அந்த காதல்−

வாராதது, என் கலி காலம்!
வானம் பொய்த்த பூமியைப் போல்,

வஞ்சி நிலை ஆச்சுதடா;

வேணும் நீ என்ற நினைப்பு, இங்கு−

வெறும் கனவாய் போச்சுதடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s