​(8) மான்ஸரோவர்…

கண்ணன்:−
முப்போதும் உன் நினைவிருக்க,

தப்பேதும் நான் செய்வேனா?

எப்போது நீ, என் மனம் அறிவாய்?

“அப்போதும்” வாழ்வில், இனி வருமா?
ராதை:−
இப்போது நீ பேசுவதெல்லாம்,

இதுவரை, பலமுறை கேட்டாச்சு;

தப்பெல்லாமும் செய்து விட்டு,

தொழுவதும், அழுவதும் பழசாச்சு!
மயங்கச் செய்யும் முகம் உனக்கு; அதில்

மனதை இழக்கும் வரம் எனக்கு!

தயங்காமல் தவறுகள் நீ செய்தும்,

தண்டனை என்னவோ, இங்கெனக்கு!
கண்ணன்:−
வார்த்தைக் கணைகளை வீசுகிறாய்; அதில்,

வீரியம் ஏனோ இல்லயடி; உன்−

பார்வை தழுவல்கள் முன் அதுவும்−

பசுவாய், ஏனோ பதுங்குதடி!
உன் உதடுகள் என்னைப் பேசுவதெல்லாம், உன்−

உள்ளம் பேசாது, நானறிவேன்;

என் அகத்தில் ஒளிரும் சந்திரன் நீ;  

சுடுமோ அதுவும், எனை சூரியனாய்?
ராதை:−
வெண்ணை போல் உன் பேச்செல்லாம்,

வழுக்கிக் கொண்டு விழுகிறதே;

கண்ணைக் கட்டும் வித்தை போல்,

பெண்ணை உன்பால் இழுக்கிறதே!
பொங்கும் சினமும் மங்கிடவே,

பாங்காய், பல கதை பேசுகிறாய்!

எங்கே கற்றாய், இந்த வித்தையும் நீ?

என்னில் ஏதேதோ நிகழ்கிறதே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s