(112) நாச்சியார் மறுமொழி…

தயக்கம் ஏன் தோழியே, 

தாமதம் தேவையா?

தனிமையை தவிர்த்து நீ−அவன்

தோளுமே சாய வா!
பரிவிருந்தாலே, 

பெண்மையும் ஒளிரும்;

பிரிந்து நின்றாலோ, 

துன்பமே தொடரும்!
கரியவன் கண் இணை 

கலந்து விட்டாலே−

சரியாய் போகும், 

சஞ்சலம் தானே!
விரைந்து வருவாய், 

வஞ்சியே நீயும்;

வேங்குழல் ஓசையும், 

உன்னிலே நிறையும்!
மனம் எனும் கோயிலில் 

அவன் வந்தமர−

மகிழ்ச்சியும் வாழ்வில் 

பெருகும் தானே!
கணமும், இனி நீ −

காத்திருக்காதே;

காதலில் “ஊடல்” பின், 

“கூடல்” தானே?
உன்னைக் கொடுப்பாய், 

உவகையும் கொடுப்பாய்;

உத்தமன் மனதில், 

என்றென்றும் நீயே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s