​(அவள், தருவாளே….)

காட்டிலே கொடு விலங்கிடை

மாட்டிய மருண்ட மானதுவாய்,

கரும வினையெனும் கலி இடை−

கடையேனும் அகப்பட்டேன், அந்தோ!
ஈட்டிய வினையின் கூட்டம்,

ஏறி என் சிரம் மேல் நிற்க,

நாட்டிலே என்னை வைக்க,

நயந்துமே யாரே வருவார்?
சூட்டி அவனைத் தொழுதேனில்லை;

பாட்டில் அவனை வைத்தேனில்லை;

ஏட்டிலே சொன்னதெல்லாம்,

கூட்டியும் படித்ததில்லை!
கரணங்கள் அவனுக்காக்கவில்லை;

சரணங்கள் எனக்காக்கவில்லை;

மரணம் என்னும் தேர் மண்டும்

தருணமதில், தமியேன் வந்தேன்!
தாதை அவன் விழிகளிரண்டில்,

தயையை, நான் பார்க்கவில்லை;

தாயவள் கண்களிலோ,

அதற்கு ஒரு குறையுமில்லை!
மூன்றெழுத்தால், “அம்மா” என்றழைத்து, அவள்−

முந்தானையுள் ஒளிந்தால் போதும்;

“நானிருக்கேன், அஞ்சாதே” என்று

நயந்தவள் கரம், என் சிரம் கோதும்!
எம்பெருமான் தானே வருவான்!

எனக்கு அவனொடு ஏதும் இல்லை;

என் தாய் அன்பின் எல்லை!

எம்பிரான் மீறான், அவள் சொல்லை!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s