​(ஆனந்தம் பொங்கும் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள்…)

அன்பு பரிமாற வந்தது 

தீபாவளி−

ஆனந்தம் பெருக்கெடுக்க நிறைந்தது புத்தொளி!

இன்னல் தீர்ந்ததென்று, இனி எங்கும் சிரிப்பொலி;

ஈந்து களித்திட, திறந்தது 

ஓர் வழி!
உன்னதம் உணர்ந்திட,

உள்ளத்தாலினி சங்கமிப்போம்;

ஊரெல்லாம் கேளிர் என்பதையே புதுப்பிப்போம்;

எனக்கென்று வாழாமல்,

நமக்கென வாழ்ந்திடுவோம்;

ஏராளமாய் பாசம் 

எல்லார்க்கும் தந்திடுவோம்!
ஐவிரலும் கொண்ட இருகரங்களும் உழைக்கட்டும்;

ஒன்றி, ஒற்றுமையாய்,

ஒரு பயணம் துவங்கிடுவோம்;

ஒளவியம் நீங்கி, நாம்−

ஒளதாரியமாய் இருப்போம்;

இஃதே நெறி, எனவே

இளையவர்க்கு காட்டிடுவோம்!
தீபாவளி, தென்றலாய், 

இல்லமெங்கும் பரவட்டும்;

தீபாவளி, புதுப்புனலாய்,

உள்ளங்களை துலக்கட்டும்;

தீபாவளி, மனஇருளகற்றி,

மங்கல ஒளி ஏற்றட்டும்;

தீபாவளித் திருநாள், நமை

திருந்தியவராய் மாற்றட்டும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s