​(உனக்காக, எல்லாம் உனக்காக…)

(படமும் கருத்தும்:− திரு.Rajagopal Srinivasan அவர்கள்..)
உனக்காக உழைப்பதிலே, இந்த

உள்ளம் உவகையே கொள்ளுதடா;

எனக்கு இதுவே என்றும் போதும்;

என்னுலகம், உன்னைச் சுற்றியே சுழலுதடா!
வயிற்றில் நீயும் ஜனித்த நாளாய், என்−

வாழ்வில் எத்தனை மாற்றமடா!

கயிற்றால் வந்த ஓர் உறவில்−நீ

கனிந்து வந்த என் கண்ணனடா!
மசக்கை படுத்திய போதும் கூட,

மாணிக்கம் உனக்காய், தாங்கி நின்றேன்;

இயற்கை தந்த இன்னல் கூட,

இன்பமாய் தானே, ஏற்று நின்றேன்!
வெளியில் நீயும் வாராத போதே,

ஓராயிரம் பேரால் உனை 

அழைத்திருந்தேன்;

வந்தென் மடியை நிறைத்த போதோ,

வாடாத உன் முகம் பார்த்திருந்தேன்!
பள்ளிக்குச் சென்றாய், பாடங்கள் பயின்றாய்,

பல்கலைக் கல்வியில் பட்டமும் பெற்றாய்!

அள்ளித் தந்த ஊதியத்தாலே, நீ−

ஆளும் உயர்ந்தே போனாயடா!
துணையொடு உன்னைச் சேர்த்த பின்னாலும்,

தாய் என் உழைப்பைத் தொடர்ந்தேனடா!

தவறு அதில் ஏதும் அறியாதிருந்தேன்; இந்த

தாய்க்கு உன்னவளும் ஒரு சேயேயடா!
பேரக்குழந்தை வந்தே பிறந்தான்;

பூரித்து நானும் போனேனடா;

பிஞ்சான காலால், என் மார்பு உதைக்க,

பிறவிப் பயனை நான் அடைந்தேனடா!
உனக்காக உழைப்பதிலே, இந்த

உள்ளம் உவகையே கொள்ளுதடா;

எனக்கு இதுவே என்றும் போதும்;

என்னுலகம், உன்னைச் சுற்றியே சுழலுதடா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s