​(உன்னவளாய்….)

கண் இரண்டும் அசைய, அசைய−

காதல் கொண்டு நீ நோக்க,

கன்னி, தோற்றுப் போகிறேன்;

கால நேரம் மறக்கிறேன்!
கை விரல்கள் அசைவினிலே,

கனியும் அந்த இசையிலே,

கிறங்கி நானும் போகிறேன்; உன்

கீதமாய் எனை தருகிறேன்!
அதரம் அசைந்து, என் பெயரை−

நீ உச்சரிக்கும் வேளையில், எனை

அழகாக அறிகிறேன்;

அதற்காகவே வாழ்கிறேன்!
இதயம் அசைந்து என்னை நீயும்,

உன்னுள்ளே உள்வாங்க,

உன்னில் என்னை உணர்கிறேன்;

உன்னவளாய் உறைகிறேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s