​(என்னவளே, அடி என்னவளே…)

உன்னில் என்னை நான் தேட,

என்னில் உன்னை நீ தேட,

கண்கள் இங்கு தடையாகுதே,

காதலில், அங்கம் எல்லாம் முடையாகுதே!
நெஞ்சிலே உன் நினைவு,

விஞ்சியே இருக்குதே;

வஞ்சியே, நீ பேசும்

கொஞ்சு மொழி கேட்குதே!
சித்திரமாய் உந்தன்

சீரிய உருவமும்,

நித்திரை விரட்டுமந்த

நீண்ட இரு விழிகளும்
நித்திலமே, எந்தன்

நெஞ்சில் நிலைத்திருக்க,

பத்திரமாய் என்னுள்ளே, உனை−

பார்த்தே இருக்கேனடி!
வேளையும் பொழுதும், நான்−

உன்னிலே கலந்திருக்கேன்;

வேறென்ன வேணுமடி, கண்ணே, என்−

பேறே, இது தானடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s