​(கரும்பும் கசக்குமோடி?…)

ராதை:−
உன் மூச்சுக் காற்றை உள் வாங்கி,

என் புல்லாங்குழல் பூத்து விட்டதடா;

ஏழை என் நிலை என்ன சொல்ல?

ஏதும் வார்த்தை இல்லையடா!
கண்ணன்:−
குமரி உனைக் கண்ட பின்னாலே,

கண்ணனே, பூவாய் மலர்ந்தேனடி; உன்

கண்ணெனும் கணையை நீ எய்தி, அதை−

கொய்திட துணிவதும் சரியோயடி?
ராதை:−
உந்தன் ஒளியை ப்ரதிபலிக்கும்,

வெண்மதி தானடா, என் வதனம்!

எந்தன் பிழை இதில் ஏதுமுண்டோ?

உன்னால் தானே, இது எதுவும்!
கண்ணன்:−
அசைத்துப் பார்க்கிறாய், உன் அழகால்;−

அதில் ஆட்டம் காண்பதும் என் தவறா?

இசைக்கவும் மறந்து போனதடி; 

இந்த குழலும் ஊமையே ஆனதடி!
ராதை:−
நம் குழல்களின் மௌனமும், இங்கு நல்லதடா;

நம்மை ஒருவரும் அறியாரடா!

நானும் நீயும் தனிமையிலே,

நாளெல்லாம் இனிமையை உணர்வோமடா!
கண்ணன்:−
கன்னி, உன் மொழி,  கனி மொழியாய்,

கண்ணனும், இனியே கொள்வேனடி!

காத்திருப்பேனோ, ப்ரிய சகியே?

கரும்பும் கசக்குமா, என் கண்மணியே??..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s