​(காரியமே செய்வாயா?…)

(படம்  & கருத்து உபயம்:− திரு.Keshav  Venkataraghavan அவர்கள் & திரு.Manoharan Jayaraman அவர்கள்…)
அண்ணாந்து நோக்கி,  

அச்சுதா, உனைத் தொழ−

அகத்துள்ளே நிறைந்து, இந்த,

அடியவனுக்கே அருள்வாயா?
விண்ணாரும் வியப்ப

வித்தகமே செய்வோனே!

எந்நாளும், என் சிந்தை, உன்−

பின்னோடச் செய்வாயா?
திண்ணம் நீயென, யான்−

தெளிவோடிருந்திட,

எண்ணம் மேவியே,

என்னை விளங்கவும் வைப்பாயா?
நண்ணும் அன்பர் குழாம், எனை

நயந்தே ஏற்றிட,

நாரணா, நின் அருள்,

நாயேனுக்கு ஆயிடுமோ?
பண்ணுள்ளே நாதமாய் நீ

பரவிக் கிடப்பது போல்,

பாவியேன் உள் பரவி,  நீ−

பாலித்திட விரைவாயா?
தண்ணென்ற நின் திருப்பதத்தை,

தமியேன் என் சிரம் வைத்து,

தணலாகும் சம்சாரம்,

தீண்டாது காப்பாயா?
கண்ணனெனும் கருந்தெய்வம் நீ,

கருத்தினில் உட்புகுந்து,

கடையேனும் கடைத்தேற,

காரியமே செய்வாயா?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s