​(தள்ளிப் போ…தள்ளிப் போ….)

(படம் உபயம்:− திரு.Rajagopal Rajagopalan Srinivasan அவர்கள்..)
அழகு வதனம் கண் முன்னே,

அருகில் வந்து ஆடுதடி;

அதன் தாக்கத்திலே, என் மனதோ−

ஆசையிலே ஆடுதடி!
பார்வைக் கணைகள் நீயும் ஏவ,

படுத்த பசுவாய் ஆனேனடி;

யார்க்கும் இது போல் நிலை வேண்டாம்−இந்த

யாதவன்  ரொம்ப பாவமடி!
உருவம் காட்டி, உளம் பறிக்கும்,

வித்தை எங்கு கற்றாயடி?

இரு கரத்தால் அணைத்து, எந்தன்−

இதயம் கொள்ளை, நீ கொண்டாயடி!
தீண்டாதே, போதுமடி, என்

தவிப்பும் ரொம்ப கூடுதடி;

தாங்காதே இவன் தேகம்;

தடுமாறி இவன் போவனடி!
யாதவனும் தனை மீட்க,

இடைவெளியே தந்திடடி; இன்று−

மாதவனும், மனிதன் ஆனேன்;

மங்கை அதையும் உணர்வாயடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s