​(பாதுகையாய் ஆவேனோ?….)

கைகேயி மகன் வந்து, 

கொண்டு சென்றானே, உன் பாதுகையே;

காகுத்தா, என்ன செய்வாய்? இந்த

கானகத்தில் இன்னமும், நீ நடக்கணுமே!
உன்னோட செவ்வடிகள்

புண்ணாக போகவிட்டு,

கண்ணாலே பாத்திருக்க

கல் நெஞ்சோ எனக்கில்லையே!
கண்ணீரும் வெந்நீராய்,

கணக்கின்றி பெருகிடுதே;

வெந்நீரும் விழி வழிந்து,

விழல் நீராய் ஓடிடுதே!
எம்மானே, உனக்கேனோ

இத்தனையே சோதனையே?

பெம்மானே, போதுமடா,

பாவி நெஞ்சு உருகுதடா!
கோசலையும் பார்த்தாலே,

கொதித்துத் தான் போயிடுவாள்;

கைகேயி தன்னைத் தான்

கனல் நெருப்பில் இட்டிடுவாள்!
வேணாமே, வைகுந்தா,

வேதனையாய் இருக்குதடா;

வைக்கின்ற ஓரடியும்,

வஞ்சி என்னை கொல்லுதடா!
நானாக என் செய்வேன்−

நலிவுனதை நீக்கிடவே?

நீயாக முன் வந்தால்,

நல்வழியும் பிறந்திடுமே!
பிராட்டிமாரும் கூசிப்பிடிக்கும், உன்

பூங்கோமளத் திருவடிக்கே,

பாதுகையாய் நானாக

பரந்தாமா, நீ பரிவாயோ?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s