​(ராதா க்ருஷ்ண ஸம்வாதம்..)

ராதை:−
அழைத்தவுடன் இன்று வந்து விட்டாய்;

ஆனது என்ன பரந்தாமா?

பிழைக்கட்டும் பாவம் பேதை என்றா,

பகலில் நிலவாய், நீ வந்து விட்டாய்?
கண்ணன்:−
நாளும், பொழுதும் உன் நினைவினிலே,

நானோ காலம் தள்ளுகிறேன்;

நங்கை நீயோ, என் நிலையை

ஏனோ, நம்பவும் மறுக்கின்றாய்!
மனதில் நினைத்தாலும், போதுமடி−

மங்கை உன் முன் வந்திடுவேன்;

கனவிலும் உன்னுடன் இருப்பவன் நான்−

காதலி உன் குரல் செவி வீழாதோடி?
ராதை:−
கண் முன் நடப்பது உண்மை என்றா,

கிள்ளி என்னையே பார்க்கின்றேன்;

கண்ணன் குரல் என்

கற்பனையோ,

கன்னி என்னையே கேட்கின்றேன்!
மலையையும், மரங்களும் சாட்சி வைத்து, இனி

மாதவா, என்னுடன் பேசிடு நீ;

இலை, இலை, அது நான்

சொல்லவில்லை−

என்று, என்னையும் ஏய்ப்பதில் வல்லவன் நீ!
கண்ணன்:−
ஐயம் என்பது வியாதியடி;

அது, அன்பே உனக்கும் வரலாமோடி?

மெய்யன் நான் ரொம்ப பாவமடி; இந்த

மேதினியில் எனக்கென்றும் நீயேயடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s