​(ராதையின் நெஞ்சமே…)

கண்ணன்:−

ஏனடி ராதா, அழுகின்றாய்?

யார் என்ன சொன்னார், நீ சொல்லு!

வீணாய், நானிங்கு எதற்காக, ஒரு−

விவரமே தெரியாமல் இருக்கேனோ!
ராதை:−

யாதவா, நீ என் அருகிருக்க,

யாரும் எனைப் பேச விடுவாயோ?

மாதவன் துணையும் இருக்கையிலே, ஒரு 

மனத்துயர், எனக்கும் வந்திடுமோ?
கண்ணன்:−

பின், ஏனடி, உந்தன் விழிகளிலே,

பொங்கியே நிக்குது கண்ணீரே;

பார்க்கப் பார்க்க என் மனதில், 

பெருஞ் சோகமும் சூழுதே, என் மானே!
ராதை:−

பூ ஒன்று தேடினேன் உனக்காக; 

பூங்கொடி வளைத்தேன் அதற்காக;

பார்க்காது போனேன், அதன் முள்ளை;

பதம் பார்த்து விட்டதடா, என் கையை!
கண்ணன்:−

நான் உன்னைக் கேட்டேனா, பூவெல்லாம்?

ஏன் தானோ, உனக்கிந்த சோலியெல்லாம்?

ஆண் நானும் இங்கே அருகிருக்க,

வீண் வேலை பார்க்கணுமா, என் கண்ணே?
ராதை:−

வலி என்ன பெரிசாடா, என் கண்ணா,

உனக்காக தாங்காத, நான் பெண்ணா?

வீணாக கலங்காதே, இதற்காக,

உன் கார்குழலில் இதை ஏற்பாய், எனக்காக!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s