​(வருவாயே, நீ வருவாயே…)

பத்து பொருத்தம் இருந்தா மட்டும்,

பாவை கிடைப்பளா?

ஒத்து போகும் மனசிருந்தா, அவ−

உனக்கு கிடைப்பளே!
முத்தம் ஒன்று நீ தந்தால்,

மயங்கி நிற்பளே;

பித்துப் பிடித்து, உன்னையே, அவள்−

சுற்றி வருவளே!
தை பிறந்த சேதி, இங்கு

நீயும் அறிவையே;

தையலையே சேர்ந்திடவே,

தேடி வருவையே! 
நினைவினிலே, உன்னைச் சுமக்கும்,

நங்கை உணர்வையே;

நிஜத்தினிலே, அவளை ஏந்த−

நீயும் வருவையே!
இன்னும் அவளைக் காக்க வைத்தல்−

இதமும் ஆகுமா?

இன்பத்திலே அவளை வைக்க−

இளமை வாழுமே!
கைபிடித்து கன்னி அவளை

ஏற்றிடுவாயே;

மையோடும் விழித்துயரம்

ஆற்றிடுவாயே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s