​(10) மான்ஸரோவர்…

ராதை:−
பொய் வார்த்தையே சொன்னாலும், இந்த

பேதைக்கு நீ வேணுமடா;

மெய் உருக்கும் உன் வார்த்தை, என்னை

மீட்டெடுக்கும் தோணியடா!
இனி எங்கேயும் செல்லாதே;

என் உள்ளம் அதைத் தாங்காதே;

இந்த ஊன் மேவும் உயிர் நீயே;

இதை நீயும் மறவாதே!
கண்ணன்:−
சோதை மேல் சத்தியமடி−

சகி உனை, நான் நீங்கேனே;

கோதை உந்தன் விழிகளிலே, இனி−

கண்ணீர் துளிர்க்க,  பாரேனே!
ராதை:−
சத்தியமெல்லாம் செய்யாதே; உன்

சரித்திரமே, அறிவேனே;

தித்திப்பாய் பேசி என்னை,

திசை மாற்றப் பார்க்காதே!
தோள் சாய வருவோர்க்கு,

தாள் சேர்த்து, வாழ்வு கொடு;

ஆள் அதற்கே அவராமே;

அதை நீயும் உணர்ந்து விடு!
கண்ணன்:−
என் கண்மணியே, கற்பகமே,

உன் சொல்படியே, இனி ஆகட்டும்;

முன் போல,  என் ராதே,

மார்வம் நீயும் தழுவட்டும்!!
                              (முற்றும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s