​(113) நாச்சியார் மறுமொழி…

(இன்று ராதை, தன் மனம் திறக்கிறாள்….)
கேளேன் என் தோழி− என்

கேசவனை கூட்டி வா நீ!

தாளேன் ஒரு கணமே−அவன்

தயை வேணும், போய் சொல் நீ !
நாளும், பொழுதும் நான்−அவன்

நினைவில் தானிருந்தேன்;

நங்கை என் மீது, அவன் காதல்

அளந்திருந்தேன்!
உயிரை உயிர் அறியும்−ஒரு நொடியும் மறந்தறியேன்;

ஊடலில் சுகம் கண்டு−உள்ளம் அங்கே தந்திருந்தேன்!
தாளேன் ஒரு கணமே−அவன்

தயை வேணும், போய் சொல் நீ !
மலரின் மணம் போலே−என்

மனதில் நிறைந்திருந்தான்;

மங்கை நான் அவனில், பாதி என்றும் புரிந்திருந்தான்!
ஓருயிர், ஈருடலாய் தனித்தனியே தானிருந்தோம்;

ஒருவர் மற்றவரை, மனதினிலே சுமந்திருந்தோம்!;
தாளேன் ஒரு கணமே−அவன்

தயை வேணும், போய் சொல் நீ !
பாரேழ் பார்த்திருக்க, உடலளவில் பிரிந்திருந்தோம்;

பார்வையில் பொய்யை வைத்து− பழகிய நாள் நினைத்திருந்தோம்!
யார் தாம் இடை வருவார்−எமக்குமுண்டோ பிரிவுமெல்லாம்?

யாதவன் கோதையே நான்−இந்த

கோதைக்கோ, அவன் சகலமுமே!
தாளேன் ஒரு கணமே−அவன்

தயை வேணும் போய் சொல் நீ !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s