​(114) நாச்சியார் மறுமொழி…

உன் வாசல் வந்தேன், வைகுந்தா..

என் நேசம் சொன்னேன், கோவிந்தா;

பின்னும் என்னைப் பேச விடாமல்−

இன்றே என்னை ஏற்பாயே…
நெஞ்சில் நீயே நிறைந்திருக்க−

நங்கை உன் சரண் அடைந்தேனே;

கொஞ்சம் கருணை கொண்டென்னை−

கண்ணா, காத்திட வருவாயே…
தஞ்சம் புகுந்தேன், நின் தாளிணையே−

தயையுடன், என்னை அணைப்பாயே;

“அஞ்சேல்” என்றே ஆறுதலாய்−

அபலைக்கு, அடைக்கலம் அளிப்பாயே!
எத்தனை தவறுகள் செய்தாலும்−

என் பிழை பொறுத்து, நீ அருள்வாயே;

மொத்தமாய், என்னைத் தந்து விட்டேன்−

முகுந்தா! என்னை மீட்பாயே!
விழலுக்கு இறைத்த நீரே போல்−என்

வாழ்வும் கழிந்திட விடுவாயோ?

கழல்கள் அவையே வந்தடைந்தேன்−உன் கருணையை எனக்கே, தருவாயோ?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s