​(3) பாதுகையாய் ஆவேனோ?…

பாதாளம் அளந்தாயே,

பதும பதம் பரிதவித்ததோ?

ஆகாயம் பரவும் போது, 

அது அல்லலும் அடைந்ததுவோ?
மூவுலகும் மூன்றடியால்

முகுந்தா, நீ அளந்தகாலை,

மெத்தென்ற உன் பூம்பாதம்,

சக்தியெலாம் தானிழந்ததோ?
எத்தனையோ ஜீவர்கள்,

அத்தனையும் நீ ஆட்கொண்டாய்;

ஒத்தை உயிர் அதிலொன்று,

அத்தன் பதம், உபசரித்ததா?
இத்தனையும் கண்ட பின்னும்,

ஏழை மனம் சகித்திடுமா?

சித்தமெல்லாம் தானுருகி, உன்−

சீரடியே ஏந்தாதோ?
ஒரு நொடியே, உன் பதத்தை,

உவந்து எந்தன் மடி வையடா;

ஒத்தடமே தந்து, உந்தன்−

உறு துன்பம் தீர்த்திடுவேன்!
நடந்து, கடந்து, நீ இங்கு−

அடைந்த வலி போதுமடா;

கிடத்தி என்னை நின் பாதுகையாய், 

துடித்த பதத்திற்கு சுகம் கொடடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s