​(9) மான்ஸரோவர்….

கண்ணன்:−
கண்ணே, பார்த்தாயா,

கரு மேகம் சூழ்ந்துளதே;

பண்ணே இசைப்பது போல்,

குயில் கானம் கேட்கிறதே!
மலரின் வாசமுமே−

மதி மயங்கச் செய்கிறதே;

சில்லென இளங்காற்று,

சீண்டியுமே பார்க்கிறதே!
ஏனோ தெரியவில்லை,

எனை நானே மறந்தேனே;

மானே, உன் மடியில்,

தலை சாய விழைந்தேனே!
ராதை:−
கன்னி என் மன வாட்டம்,

கருமேகம் காட்டிடுமே;

கானம் இசைக்கும் குயில், 

என் சோகம் சொல்லிடுமே!
சூடா மலர்களினால், என்

சோகம் தெரிந்திடுமே;

நாடா உன்னை எண்ணி,

நான் அழுதது, ஆறாயிடுமே!
ஏனோ புரியவில்லை,

என் நிலை, உனை உருக்கவில்லை!

தானாய், தனிமையிலே, நான்

துடித்ததில் நீ துவளவில்லை!
கண்ணன்:−
மேகமும், மலர்களுமே−உன்

சோகம் சொல்ல வந்ததென்று, மன−

மோகத்தில் தவித்திடும், இந்த−

மாதவனோ அறியேனே!
பிரிவின் கண்ணீரும்,

பெருக்கெடுத்து ஓடிடுமோ?

பேதமை முற்றிவிட்டால், 

பெருங் கோளாறாயிடுமோ?
யமுனை போலொன்று,

இங்குளதென இருந்தேனே;

யாதவன் பிரிவினிலே

பிறந்ததென அறியேனே!
ஏனடி, என் மானே, இந்த

மான ஸரோவர் இனியென்றும்

மங்கை உனக்காக, 

மகிழ்ச்சியின் கடல் ஆயிடுமே!
போனது போகட்டுமே, உன்

பார்வையில் அன்பு பிறக்கட்டுமே;

ஆனது சரியென்று,

அடியவனும், இனி பிழைக்கட்டுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s