​(பாவை விளக்கு…)

பெண் என்பவளும் ஒரு விளக்கே−

புரிந்தால் போதுமே இங்கிவர்க்கே!
விளக்கின் வகைகள் விதம் விதமே; ஆயின்,

இலக்கோ, இருளை விலக்குவதே!
பெண்ணாய் ஒளிர்கின்ற பிறவியுமே,

பிறர் சுகத்திற்காய், இறை தந்ததுவே!
எண்ணையும், திரியும் சேர்ந்திட்டால்,

விளக்கில் ஒளியைக் கண்டிடலாம்;
ஏதுமில்லாது வைத்திட்டால்,

ஒளியின் வழியை, நாம் அடைத்திடலாம்!
பரிவும், பாசமும் தந்திட்டால்,

பாவையை, விளக்காய் கொண்டிடலாம்!
ஏதும் அளியாதிருந்தாலோ,

ஏந்திழையவளை நாம் இழந்திடலாம்!
ஒளிர்வதோ, ஒழிவதோ  வாழ்க்கையில்,

உள்ளதென்னவோ, நம் கையில்!
ஒரு கணம் நின்றே யோசிப்போம்;

உயரிய வரம் அவள்−பூசிப்போம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s