(என்னவனே, அட என்னவனே…)

(“காயிலே புளிப்பதென்ன” மெட்டு..)

என்னுள்ளே இருப்பதென்ன,
கண்ண பெருமானே? நீ
எண்ணத்தில் இனிப்பதென்ன,
கண்ண பெருமானே?

உன்னுள்ளே வைத்ததென்ன,
கண்ண பெருமானே? இந்த−
ஊனிலே உயிர்த்ததென்ன,
கண்ண பெருமானே?

கண்ணுள்ளே கலந்ததென்ன,
கண்ண பெருமானே? எனைக்−
காதலியாய் கொண்டதென்ன,
கண்ண பெருமானே?

முன்னம் கேட்ட முத்தமெல்லாம்−
கண்ண பெருமானே, நீ−
மொத்தமாய் தந்ததென்ன,
கண்ண பெருமானே?

பெண்ணை நீ புரிந்து கொண்டாய்,
கண்ண பெருமானே! இனி−
பிரிவென்று ஏதுமில்லை
கண்ண பெருமானே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s