(கனிவாயே, காதலியே…)

பாராமுகம், வேணாமடி,
பரந்தாமனே சோர்வானடி!
ஆரோ அடி, நீ அன்றியே? உன்−
அன்பிலே, நான் கைதியே!

பிணக்கேதும் கொள்ளாதே, பெண் மானே நீ;
பொறுக்காது தள்ளாதே, பரிதாபம் பார்!
தனக்கென்று ஒரு மானம் பாராமலே−
உனக்காக வந்தேனே, உள் அன்பிலே!

சற்றேனும் உன் கண்கள் எனைக் காணுமோ?
சருகாகிப் போன, என் உரு பேசுமோ?
மற்றேதும் நான் சொல்ல வேணாமடி!
மாதவன் நிலை ஏதும் மறைக்காதடி!

ஊராரின் பேச்சில், ஓர் உண்மை இல்லை;அதை−
உத்தமியே, உணராமல் நீயுமில்லை!
வேறாரும் நினையாத என் நெஞ்சமே−
வஞ்சியே, நாடுதடி, உன் தஞ்சமே!

நெகிழாதோ, உன் உள்ளம் என் மீதிலே?
நிலைக்காதோ, நம் பந்தம் மண் மீதிலே?
முகிழாதோ, மகராணி, மனம் கொஞ்சமே−
முகுந்தனுமே, எத்தனையே, இனி கெஞ்சுவான்?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s