(கொஞ்சம், எனக்காய்…)

மனதில் தோன்றும் எண்ணம் எல்லாம்−
மாதவா, உனக்குச் சொல்லவா?
மடியினில் வைத்து, மார்புடன் அணைத்து−
மயங்கும் என் நெஞ்சை, விள்ளவா?..

கொடும் துயர்தானே பிறவியின் பிடியில்−
கண்ணா, நீயும் அறியாயோ?
சுடும் சுழல் தந்து சீவனை எல்லாம்−
சோதிப்பதும் என்றும் முறைதானோ?

விதியை மாற்றும் வல்லமை இருக்க−
வேடிக்கைப் பார்த்திடல், தகுமோ?
பதி நீ என்றால், பரிந்தே அருள−
பரமன் உனக்கென்ன தடையோ?

போவதும் வருவதும் வாழ்க்கை என்றாக்கி−
பாதகமலம், நீ மறுப்பாயோ?
ஆவதும், அழிவதும் அச்சுதன் உன்னால்!
ஆயினும் இவரையே, வெறுப்பாயோ?

தாயே தள்ளிடும் சேயின் நிலைக்கு−
தரணியில் உவமையும் உள்ளதோ?
வாவென அழைத்து, உய்வே தந்தால்,
வாழ்ந்தே போவார் இல்லையா?

பெருகிடும் கருணை, கொண்டே நீயும்−
பாலித்து, பதமே ஏற்றிடு!
உருகியே உன்னை வேண்டுகின்றேனே..
உன் அடியன் குரல், செவி சாற்றிடு!.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s