(தருவாயா, பெறுவேனா?…)

கறுப்பே அழகென்றாரே−
கண்ணா, உன்னைக்−
கண்ட பின்னே,
விண்ட வார்த்தையோ, அது?

பூவாய் சிரித்தான்;
புன்னகை அரசன்;
ஈதெல்லாம்−
உன்னைப் பார்த்த பின்னே,
பிறந்த சொற்கள் தாமோ?

வதனமே சந்த்ர பிம்பபோ,
என வினவியதும்,
உன் தரிசனம்,
ஆன பின்னோ?

கள்ளமிள்ளா பிள்ளையன்பும், நீ−
காட்டிக் கொடுத்த
கருணை தானோ?

ஈருடல்கள் இணைந்தாலே,
ஓருயிராய்−
உருமாறும் என்பதும்,
உன்னால் தான் புரிந்திடுமோ?..

இவையனைத்தும் அனுபவிக்க,
அடியேனும் ஆயத்தமே..
ஆயனே, வருவாயா,
உன்னைத் தருவாயா?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s