(தாயன்பு துலங்கிடுமே…)

பல தெருவும் கடந்து வந்தேன்−
பலனேதும் இல்லையம்மா;
சில கணமும் செலவழிக்க−
எனக்காருமில்லையம்மா!

ஆயுள்ளம் என்பதனால், உன்−
அக ஓட்டம் அறிவேனே;
தாயுள்ளத்து தயை பெறவே,
தேடி, உன் வாசல் வந்தேனே!

சொல்லாமல் அறியுமுள்ளம்−
சொத்தாச்சே, உந்தனுக்கு;
இல்லையென்னா இதயமும்−
இயல்பாச்சே, இங்குனக்கு!

பார்வையாலே வினவுகின்றேன்;
பரிவாயோ நீ எனக்கு?
பசித்திருக்கும் வயிற்றுக்கே−
புசிக்க உணவும் ஈவாயோ?

கேட்கும் முன்னே கொடுக்கின்ற−
கற்பகத் தருவே நீ! உனைக்−
கேட்டு விட்டேன் என்பதனால்−
கோபிக்காதே, அற்பனே நான்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s