(தாராயோ, உன்னை?..)

நயனங்கள் பேசிட, வார்த்தைகள் எதற்கு?
நயந்தே நோக்கிட, பொழுதென்ன கணக்கு?
நீயன்றி உறவும், யாரோ எனக்கு?
ஆயன் அகமும், தெரியாதோ உனக்கு?

பார்வையில் பருகுவேன், பூக்களின் தேனே;
பரவசமாகுவேன், தீண்டலில் மானே!
யாரே அறிவார், என் சுகம் தானே?
யாதவன் உன்னிடம், தன்னைத் தந்தானே!

சிலையாய் சமைந்தேன், உன் எழில் முன்னே;
சிதறுதே எண்ணமே, எந்தன் கண்ணே!
அலையாய் தொடருதே, ஆசை உன் மேலே−
அடைவதும் உன்னை, இனி எந்நாளே?

இணையும் காலமும் வந்தது என்று−
இசைந்தே ஒரு சொல், செவியே விழுமா?
அணையை வெள்ளம், தாண்டும் முன்னே−
அடைத்திட, கரங்களும் தாமே எழுமா?.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s