(துணை வருவேனே….)

உன் உதரம் தாங்கும் அக்கயிறு−
என்னை இறுக்குதடா;
கண்ணில் பட்ட காட்சியதனால்−
மனம் கனக்குதடா!

உரலின் பாரம் தாங்காமல்−
உன் இடை வலிக்கிறதோ?
பரபரவென வந்ததினால்−
உன் நடை தளர்கிறதோ?

மருத மரங்கள் இடையிலிருக்கே!
மார்கம் வேறில்லையோ?
திருவிளையாடல் இது தானோடா?
என் தவிப்பே, ஏறுதடா!

ஏதாவது உனக்கானாலோ−நான்
என் செய்வேனடா?
மாதா அவள் அறிந்தாலுமே−
பதைபதைப்பாளேடா!

பார்ப்பதெல்லாம் அசுரரென்று, என்−
பார்வை சொல்லுதடா;
போதுமே உன் லீலையெல்லாம்;
பேதை தாங்கேனடா!

ஆருக்கு நீ அருளிடவே−
இந்த அவசரமோ?
வேருக்கிடையில் உரலிருக்கே!
இரு, துணைக்கு வாரேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s