(விட்டல, விட்டலா..)

விட்டல, விட்டல கோவிந்தா,
வீழ்ந்தேன் உன்பதம் வைகுந்தா!
விடுமோ பந்தம், ஹே விட்டலா?
தொடுமோ, உன் அருள் ஹரி விட்டலா?

உறவென உனையே என் விட்டலா-
உள்ளம் கொள்ளுமோ, சொல் விட்டலா!
மறவேன் என்றே நெஞ்சமுனை-
மகிழ்ந்துள் வைக்குமோ, ஹே விட்டலா!;

பிறவிப் பெரு நோய் தொடராதே-
மருந்தாய் வருவாய், என் விட்டலா!
போதும் உனக்கிந்த ஸம்ஸாரம், என−
பரிவாய் வார்த்தையும், சொல் விட்டலா!

மறந்தேன் உந்தன் பிழையென்று−
மன்னிப்புத் தாயேன், என் விட்டலா!
கனிந்தேன் உனக்கே பார் என்று-
கரத்தால், எனையே அணை விட்டலா!

தழுவியே நீயும் அணைத்தாலே-
தாபம் நீங்குமே என் விட்டலா!
கழுவிய கசடாய் என் கலியும்-
கரைந்தே ஓடுமே, ஹே விட்டலா!

நாமம் உனதால், நாக்கழுவி-
நாயேன் வந்தேன் ஹரிவிட்டலா!
சேமம் எல்லாம் நீ தந்து-
செவ்வடி ஏற்பாய், ஹே விட்டலா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s