( அடைந்துய்யுமோ ஆவி?….)

உள்ளே இருக்கும், உன்னை நான்−
வெளியில் ஏனோ தேடுகின்றேன்;
கள்ளம் மூடிய நெஞ்சிலுனை−
காணாமலே தவிக்கின்றேன்!

எண்ணம் போலவே, நீ எதிர் வரவே−
ஏதும் செய்யவோ அறிந்திலனே;
திண்ணம் உன்னைக் கொண்டிடவும்−
தீரா வேட்கையோ, இங்கிலையே!

தேடித் தேடி, ஓடியெங்கும், நீ−
தென்படாமலே, வாடுகின்றேன்;
நாடி, உனையே நயந்திடுவோ−
நற்பேறின்றியே, நலிகின்றேன்!

கூவி உன்னைக் கைக்கொள்ள−
குருவின் கழலும் பற்றிலனே;
ஆவி உன்னை அடைந்திடவே−
அடியவர் துணையும் பெற்றிலனே!

நானாய் உன்னை அண்டிடவே−
கோனே, கருத்துன் மீதிலையே!
தானாய், நீ வந்தாட்கொள்ள−
தமியனுக்கிங்கே தடையில்லையே!..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s