(அன்னையே, அற்புதமே…)

வார்த்தை தீயின் வலியதோ,
வெந்தழலின் வெம்மையே?
ஆர்த்தெழுந்த உன் நெஞ்சடக்கி−நீ
அமைதி காத்த பொம்மையே!

யார் சொன்னார் என்னை என்று−
எதிர்ப்பு காட்டவில்லையே;
சீர்த்திருத்தம் செய்வளென்று, நீ−
சீறிப் பாயவில்லையே!

போர் தொடுத்த மனதைப் பொத்தி−
பாவை, மாண்பு பேசினாய்;
பார் தந்த பரிசை ஏற்று−
பாதை உனதை மாற்றினாய்!

சேர்ந்திருந்த பொழுதை எண்ணி−
சீவன் முழுதும் ஓட்டினாய்;
நூர்த்த நோன்பு என்றே நீ−
நாதனுரு மனம் தீட்டினாய்!

ஊருக்காக, ஆகுதியாய்,
உந்தன் வாழ்வை ஆக்கினாய்;
பேரும் புகழும் தியாகம் செய்தும்−
புனிதமதை நிலைநாட்டினாய்!

வேர்விடுத்த செடியெனவே,
வீழ்ந்தும், வாழ்ந்து காட்டினாய்;
சீர் உனதை பேசும் சொற்கள்−ஏன்
சிலவுமின்றி, எமை வாட்டினாய்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s