(இசை நாட்டியம் இதற்கே…)

விசையாக, வேங்குழலின் ஒலிக்கே−நல்
இசை உண்டே, மயிலொன்று ஆடும்;
நசை மேவும் நந்தன் அவன் நெஞ்சை−அது
அசைத்தே தான், தன் காதல் பாடும்!

பசையாக அவன் உள்ளில் ஒட்டி,
பெரும்பாடு, அவன் காண வைக்கும்; பண்−
இசை தானே, யாவைக்கும் மூலம், அதில்−
இவனுமே ஆனானோ ஐக்கியம்!

திசை யாவும் துளிர்க்கின்ற கீதம்−
தேவனவன் செய்ததுவோ வித்தை? மண்
மிசை, அதை தானும் வாங்கி−
மயங்க வைத்தவள் தானோ, தத்தை?

தசைஊனும், உயிருமே தாமே−
வசமாகி உருகாதோ அதற்கே?
இசைந்தாலே போதுமே இங்கே−
வேறென்ன விலை வேண்டும் இதற்கே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s