(உன் வலையில் வீழ்ந்தேனே..)

உன் கரங்கள் பட்ட கனியதுவோ−
கற்கண்டாகத் தித்திக்கிறதே;
உன் கண்பட்ட எந்தன் மேனி மட்டும்−
ஏனோ இப்படி கொதிக்கிறதே!

மனமது படுகின்ற பாடெல்லாம்−
மாதே, நீயும் அறிவாயா?
கணங்கள் தோறும் தவித்திடுமென்−
காதல் நெஞ்சை, நீ காண்பாயா?

பெண்ணே, உன்மேல் பித்தேறி−
உள்ளம் தவிப்பதும் புரிந்திடுமோ?
உன்னால், உயிர் படும் உன்மத்தம்−என்
கண்ணே உன் மனம் உணர்ந்திடுமோ?

பருவம் படுத்தும் பாடடக்க−
பரிந்து உபாயம் சொல்வோரும், உன்−
உருவம் படுத்தும் பாடடக்க, ஏன்−
ஒன்றும் சொல்லாதிருக்காரோ?

மாரன் அம்பு மற்றவர்க்கே−
என்றே நினைத்து இருந்தேனே;
மாதவனும் அதற்கு விலக்கல்ல−
மாது உன்னாலே, இங்கு தெளிந்தேனே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s