(ஊனும் உருகிடுமே…)

ஏழு ஸ்வர மத்தியிலே−
விழுந்தது என் புத்தியுமே!
இழுத்து மேலே, ஸ்வரம் சேர்க்க−
ஏன் மறுக்குது என் சிந்தையுமே?

“மா” வென்று பாடும் நாவு−
மாதவன் மேல் தாவுதே;
“தா” என்று, ஒரு ஸ்வரம் விட்டு−
தள்ளாடியே கிறங்குதே!

ஆரோகணம், அவரோகணம்−
அனைத்தும் எனக்கு மறந்ததே;
பவரோக நிவாரணன் மேல்−
பொங்கும் காதல் சுரந்ததே!

மடியேந்திய வீணை இதுவோ−
மாமலையாய் கனக்குதே;
மாதவனை மடிசுமக்கவே−
மங்கை மனம் கரையுதே!

இசைந்து அவன் வரும் வேளை−
இசை தானாய் பெருகிடுமே;
விசையாக அவன் வரவியக்க−இந்த
தசை உடலமும் உருகிடுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s