(என்ன செய்வாயோ?..)

பால் வண்ணம் பரிவில் கண்டேன்;
மால் எண்ணம் மனதில் கொண்டேன்;
கால் என்னும் கமலப்பூவே,
கடைத்தேற்றுமா?..

நான் என்னும் “பா”வம் போக்கி,
கோன் உன்னை நெஞ்சில் வைத்தேன்;
வீண் ஆன வாழ்வெனதும்,
விளங்கிடுமா?

பொய் இந்த புவனம் என்றும்,
மெய் உந்தன் பவனம் என்றும்−
வை வாழ்வில் கவனம் என்றும்,
உடன் வருவாயா?..

செய் என்றுனை யானும் வேண்ட,
கை தந்தே, நீ என்னைக் காக்க−
ஐய, நின் திரு உள்ளம்,
அபயம் அளிக்குமா?

தான்தோன்றித்தனமாய் இங்கே,
நான் செய்த நலிவே காட்டி−
ஏன் என்று என்னைக்கேட்டே,
எதிர்த்திடுவாயா?..

இல்லை,

போகட்டும் என்றே பரிந்து,
வா, இனியேனும் என்றே−
ஆலிலை பாலா நீயே,
அணைத்திடுவாயா?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s