(என் மகன்..)

உலகம் சுமக்கும் உன்னைச் சுமக்கும்−
பேறு வந்தது! அதுவே−
அலைஅலையாய் ஆனந்தத்தை,
அள்ளித் தந்தது!

உதரம் ஏந்தும் பாக்கியம்
இவள் காணவில்லையே! ஆயின்−
அதரம் திறந்து அம்மாவென−எனை
அழைத்த கிள்ளையே!

பாலூட்டி, சீராட்டியே
பரிந்திருந்தாலும், உன்னை−
கோலாட்டி மிரட்டியும் நான்−
பணிய வைத்தேனே!

வேதம் நாலும் பாடும் அந்த
வித்தகன் உன்னை−உன்
பாதம் நோக கன்று மேய்க்க
பார்த்தும் இருந்தேனே!

ஏதமில்லா எம்பிரானாய்,
என்றும்− எண்ணவில்லையே; உன்னை−
ஏதுமறியா என் பாலகனாய்
ஏந்தி மகிழ்ந்தேனே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s