(என் மடலுக்கு ஏது பதில்?….)

எத்தனை மடல்கள் எழுதி விட்டேன்−
அத்தனைக்கும் ஒரு பதில் இல்லையே!
மெத்தனம் தானோ, இல்லை மறுதலிப்போ,
நித்தம் கூடுதே, என் தவிப்பே!

ஓசை ஏதும் செய்யாமல்−
ஆசை நெஞ்சை அனுப்பி வைத்தேன்;
பாஷை உனக்குப் புரியலையோ, இந்த−
வேஷமும் ஏனோ, தெரியலையே!

நாட்கள் எல்லாம் நகர்ந்து வந்து,
வாட்களாகி, காலம் வீழ்த்திடுதே!
ஆட்களைத் தூதாய் அனுப்பியுமே−நீ
அசையாதிருப்பதில், மனம் வருந்திடுதே!

யாரையும் வருத்தலாகாது, என−
யசோதை பாடம் எடுக்கலையோ?
பேரைக் கெடுக்கும் பிள்ளை என்றே−நீ
பேர் வாங்குவதை, அவள் தடுக்கலையோ?

உனைப் பெற்றவளும் ஒரு பெண் தானே!
உனக்குற்றவளும் ஒரு பெண் தானே!
எனை மட்டும் ஏய்ப்பது, ஏன் தானோ?
எண்ணி நான் தவிப்பதும் வீண்தானோ?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s