(சிறகில்லையே, நான் பறந்து வர..)

கரமேந்திய தாமரையை, இந்த−
சிரம் மேலே வைக்க ஆசை;
சரமாகத் தொங்கும் மல்லி−
மறந்தும் இசைய மறுக்குது!

குடம் நீரை நிரப்பி எடுத்து,
குளிர் நீரில் குளிக்க ஆசை;
இடம் ஏனோ சரியில்லை−
இதயம் எனக்கு உரைக்குது!

மாலை வெயில் மேனி தழுவ,
மயக்கத்தோடு பாட ஆசை;
வேளை இல்லை, பொழுதுமில்லை−
வீசி நடக்க, உளம் சொல்லுது!

கண்ணை விழித்துப் பார்த்துக் கொண்டே,
வயது−
கனவு காணச் சொல்லுது;
தன்னை எண்ணிப் பார்த்துக்கவே, நெஞ்சு−
தகவல் சொல்லி நிற்குது!

யதார்த்தம் என்ற நிலையும்−
ஏன் முன்னே வந்து படுத்துது?
எப்பொழுது தானோ நானும்−
சிறகு விரித்துப் பறப்பது?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s