(ஜடமானேனே, ஜடாயு…)

குருதி பெருகி வீழ்ந்தாலும்,
குந்தகம் இல்லை; என்−
உறுதி குலைந்து வீழ்ந்தேனே,
ஏது நான் சொல்ல?

ஆனமட்டும், சண்டையிட்டும்−
ஒரு பலனில்லை;
தானவனை தடுக்கவுமே−
எனக்கியலவில்லை!

சானகியின் அவலக்குரல்−
இன்னும் மறக்கவில்லை;
ஈனப்பிறவி என்னுயிரோ−
என்னைத் துறக்கவில்லை!

தாயவளின் துயர் துடைக்கா−
பாவியுமானேன்;
தனயன் கடமை செய்யாத−
புலையனுமானேன்;

நாயேன் எனை மன்னிப்பாயோ,
என் நாராயணா?
நரகத்தினின்று மீட்பாயோ,
ஜகத்காரணா?

கருணையினால் கறை−
எனதை அகற்றிடுவாயோ?
காகுத்தா, கலி எனதை−
கரைத்திடுவாயோ?

மறுஜென்மம் எனக்கு மட்டும்,
ஒன்றே இருந்தால்−
மைதிலியின் மனத்துயரை−
மாய்த்திடுவேனே!

மடமையினால் ஜனகன்−
மகளை இழந்து விட்டேனே; என்−
மாதவா, உனக்கின்னலும்−
அளித்து விட்டேனே!

கடமை செய்யா பாவி எனக்கும்−
விமோசனம் உண்டோ?
கடையேன் என் தவறுக்கும்−
விடிவொன்று உண்டோ?

ஜடமாக இருந்து விட்டேன்;
ஜானகி தொலைந்தாள்! இந்த−
ஜடாயுவுக்கு அபயம் தருவாய்−
அடைந்தேன், உன் தாள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s