(தாமரைத் தடாகம்…)

இனம், இனத்தோடே அங்கு சேர்ந்ததோ?
ஈர்ப்பும் தானாகவே வந்ததோ?
மணம், மணத்தோடே வந்து கலந்ததோ?
மாதவமே, மலராகி முகிழ்ந்து நின்றதோ?

கண்கள் என்னும் தாமரைகள்−
கரத் தாமரையில் மயங்கினவோ?
கரத்தாமரை கண்ட பின்னே−
கண்ணிமைக்கவும் மறந்தனவோ?

கரங்கள் என்னும் தாமரைகள்−
கமல முகத்தில் ப்ரமித்தனவோ?
கமல முகத்தின் அழகில் நாணி−
கரத்தாமரைகள் சிவந்தனவோ?

கொப்பூழாம் தாமரைக்கு−
ஒப்பு உயர்வும் இல்லையோ?
தப்பாமல் சிக்கியதோ−அதில்
அப்பன் விழித் தாமரையே?

இடைத் தாமரை அழகையே,
இதயம் பார்க்கத் துடித்ததோ?
இல்லை, எழும்பி நின்ற மார்வ கமலம்−
அதனை தடுத்து ஆண்டதோ?

கழல்கள் என்னும் தாமரைகள்−
மற்றவற்றை விஞ்சுமோ?
நிழல் கொடுக்கும் அத்தாமரையில்−
நமது வினைகள் தஞ்சமோ?

ஆயிரமே இருந்தாலும்−
அபயம் அளிக்கும் அருந்தாமரை−
பதுமநாபன் மார்வம் இருக்க−
பத்தர் நமக்கு, இனி ஏன் குறை?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s