(நினைவுகளின் பிடியில்…)

உடலிங்கே இருக்கையிலே−
உள்ளம் மட்டும் பறக்குது!
கடல் போல எண்ண அலைகள்−
காத தூரம் இழுக்குது!

நடந்தேறுமோ, இல்லையோ−
நாளும் நினைத்து மறுகுது;
தடம் மாறினும், தன் இச்சை−
துலங்கிடவே, உருகுது!

வடமாக ஒரு எண்ணம்−
வலிந்து நெஞ்சில் பெருகுது;
அடமாக, நகராமலே−
அழிச்சாட்டியம் பெருக்குது!

இடம், பொருள், ஏவலென்று−
எதுவும் பார்க்க மறுக்குது;
புடம் போட்டு, புடம் போட்டு−
பேதை உயிரை உருக்குது!

சடமாக இருந்திருந்தால்,
சங்கடங்கள் ஏதென்று−
கடந்த கால நிகழ்விக்கின்று,
கழுவாய் தேடி நிற்குது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s