(மாலை சூட வா, மாதவா..)

மளமளவென மாலை கட்டி,
மாலனுக்குத் தர, மனம் எண்ணுது;
அளந்தளந்து கட்டினாலும், அங்கு−
அரை முழும் ஏனோ குறையுது;

ஆர் செய்கின்ற மாயமிது−என்
அறிவுக்கு எட்டவில்லையே;
கார்குழலான் கண்ணனுமே−
காத்திருப்பனா, தெரியலையே!

முழங்கால் வரை மாலையாக்க−
மனசு கிடந்து தவிக்குது;
அழவைத்து எனை பார்ப்பதற்கா−
அந்த அரை முழம் எனை படுத்துது?

நெஞ்சினோட இந்த ஆசையெல்லாம்−
நந்தன் மகன் அறிவனா?
வஞ்சம் செய்து, வாடவைக்கும்−
வழக்கம் அவன் ஒழிப்பனா?

ஆசையால தானே, நானும்−
அவனுக்காக கட்டுறேன்;
பூசை ஏற்பான் என்றுதானே−
பரிவை எல்லாம் கொட்டுறேன்!

மாலையாக்க முடியாட்டா−
மயங்குவேனோ நானுமே?
காலை காட்டச் சொல்லி, அவன்−
கழலில் சேர்ப்பேன், போதுமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s