(யதா ராஜா, ததா ப்ரஜா…)

நாதன் செய்த புண்ணியம்,
ராதை−
பாதம் பிடிக்கிறான்;
வேதம் காணா வித்தகன், காதல்−
கீதம் படிக்கிறான்!

ஏதம் இதில் இல்லையே;
அன்புக்கு எது எல்லையே?
நாதம் சேர்ந்த கீதம் தானே−
நெஞ்சினிக்கும் என்றுமே!

மூடி வைத்த எண்ணங்கள்−
முகிழ்வதுண்டோ உலகிலே?
நாடி, நயந்து நெகிழும் உள்ளம்−
நலிவதுண்டோ உறவிலே?

எடுத்தெடுத்து கொடுத்ததனால்,
இளைத்திடுமோ இன்பமே?
தடுக்காதே தருவதனால்−
திடம் காணுமே “இல்”லுமே!

அத்தன் காட்டும் வழிகள் யாவும்−
அகிலத்துக்கோர் படிப்பினை!
இத்தனையும் நீர் புரிந்து கொண்டு−
எடுக்க வேண்டும், முடிவினை!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s