(யாதும் யதுநந்தனே….)

விழிகள் திறந்தே இருந்தாலும்−
மொழியும், மனமும் உன்னிடமே;
கழியும் ஒவ்வொரு கணத்தினிலும், அது−
பொழியுதே, ஆனந்தம் என்னிடமே!

புழுவோ, புள்ளோ, சுழலிலே−
பேதை ஏதும் அறிந்திலனே;
எழுகின்ற பிறவிகள் யாதிலுமே−நான்
எம்பிரான் நினைவினில் அமிழ்ந்தேனே!

வழுவே வாழ்க்கை ஆனாலும்−
வைகுந்தன் என்னொடு வருவானே!
பழுதுகள் எல்லாம் போக்கி அவன்−
பரிவாய் ஆறுதல் தருவானே!

அழுத்துமோ கருவறைச்சுவர் எனையே?
ஆழ்த்துமோ அவலங்கள் இடையினிலே?
தழுவுதே மனம் அவன் கழலிணையே−அது
கழுவுதே என்கலி கறைதனையே!

தொழுகின்ற உன்னுரு எனைத் தாங்கி−
தமியனை தன்மடி அள்ளிடுமே! இனி
விழுகின்ற கண்ணீர் துளி எல்லாம்−
எழுகின்ற களியதைச் சொல்லிடுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s