(வரலாமே, வைகுந்தா!…)

ஊன் உருகிப் போனாலே−
உன் இசை, கேட்பதெங்கனமோ?
ஏன், இதுவா உன் சோதனை?
எங்கு வந்தது ஓர் பிழை?

நாதனே நாதமாய், எனை−
நெக்குருக வைத்தாலே−
நானெங்கே தொலைவேனோ?
நயந்துன்னுள் அமைவேனோ?

அணுஅணுவாய் அசைவித்து−
ஆசையிலே அலைக்கழித்து,
தனுவெல்லாம் தளரும் நேரம்−
தள்ளிப்போமோ, உன் நெஞ்சின் ஈரம்?

விரல் வழியும் இசை நிறுத்தி−
விரகமிதற்கு விடைதருவாயே;
வீணாகும் என் இளமைக்கே−
விரைந்தொரு வழி சொல்வாயே!

ஆட்டுவித்து, என் அகம் மயக்கி,
அல்லலை அள்ளித்தரும் நீ−
கூட்டி என்னை, உன் கோல மார்வம்−
கொஞ்சம் சாய்க்க வரலாமே!…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s