( ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 12 )

இப்படி இசைத்துக் கொண்டே, ராதையோடு, கோபியர் அனைவரையும், ஒரே க்ஷணத்தில் அசைத்தும் விடுகிறான், நம் கண்ணன்..

ஊன் உருகி, உயிர் உருகி,
நான் கருகி, நலம் பெருகி…

ஆஹா, இந்த கோபியர் செய்த பாக்யம் தான் என்ன?…

ஹே தீனதயாளா, நீ மனது வைத்தால்.. இந்த பாபியையும், உனது நிர்ஹேதுக க்ருபையால் (ஆராயாது பெருகும் அன்பு − காரணமில்லாத கருணை) ஒரு கோபிகையாக, மாற்றலாமே.. அரற்றியது மனது….அது, அச்சுதன் செவி வீழும் வரையில், ஆறி இருக்க மறுத்தது நெஞ்சம்…

இதோ…உபரியாக, மேலும் ஒரு தகவலும் கிடைத்தது. இந்த மரங்களுக்கு, கண்ணன் காலத்திலிருந்தே, யாருமே நீர் வார்ப்பதில்லையாம். எல்லா மரங்களின் தண்டுப்பகுதியும் காய்ந்தாற் போல காணப்பட்டாலும், மேலே பசுமையாகவே காட்சியளிக்கிறது. “இது எப்படி ஸாத்யம்?” என்ற கேள்வி வரலாம். கண்ணனின் அமுதம் உண்டபிறகு, வேறு என்ன தேவை இருக்கப் போகிறது?..

இப்படி, எல்லாக் காட்சிகளையும் உள்வாங்கிக் கொண்டே பயணித்த போது, பரிமளித்து எதிரே நின்றது, “ரங்க மஹல்”.. இதன் சிறப்பு, நம்மை சிலிர்க்க வைக்கிறது.. இது பெல்ஜியத்திலிருந்து, தருவிக்கப்பட்ட, முழுதும் கண்ணாடியால் ஆன எம்பெருமானின் பள்ளியறை. புத்தம்புது மலர்களாலேயே அலங்கரிக்கப்பட்ட மெத்தை, நிதமும் அவனுக்கென, இவ்விடத்தில் ப்ரத்யேகமாய் தயாரிக்கப்படுகிறது. இங்கு ராதையோடு, எம்பெருமான் இரவில், ஏகாந்தமாய் இருக்கிறானாம். அவனும், ராதையும் சாப்பிடுவதற்காக, கொஞ்சம் லட்டு, ஒரு குடுவையில் தீர்த்தம், இரண்டு பல் துலக்கும் குச்சிகள் எல்லாம் அந்த மெத்தையின் அருகே வைத்துவிட்டு, கதவை தாழிட்டுக் கொண்டு, பூஜாரி வெளியே வந்துவிடுகிறாராம்.

காலை அங்கு சென்று பார்த்தால், மலர் படுக்கை கலைந்து கிடக்கிறது. அதில் இருவர் படுத்தெழுந்ததன் அடையாளம் காணப்படுகிறது. சாப்பிட்ட லட்டின் உடைந்த துகள்கள் இருக்கின்றன. குடுவை நீர் காலியாகி இருக்கிறது. பல் தேய்க்க வைத்த குச்சியில் ஈரம்..

அவன் நெஞ்சில் ஈரம் இருப்பதால் அல்லவா, நாம் அவனுக்காக ஆசையாக வைத்ததை எல்லாம் அங்கீகரித்திருக்கிறான்.. இதுவல்லவா, பெரும் பாக்யம்!…
இப்படி அவன் தேவியோடும் கோபிகைகளோடும் ஏகாந்தமாய் ஒவ்வொரு இரவையும், இவ்விடத்தே அனுபவிக்கிறான். அதனால் நிதமும், இருள் கவியத்துவங்கும் அந்நேரம், மனிதர்கள் மட்டுமின்றி உள்ளே சுற்றித் திரியும் குரங்குகளிலிருந்து, அந்த இடத்திற்கு மேலே பறக்கின்ற பறவைகள் வரையிலுமாக, மொத்த உயிரினமும் அந்த ஸ்தலத்தை நீங்குகின்றன. கண்ணன், ராதை, கோபிமார்கள் அனைவரும், இரவு முதல் விடியல் வரை, இன்றுவரையிலும், அங்கே ராஸக்ரீடை செய்வதால்!
இது க்ருஷ்ண ஸங்கல்பத்தினால் வந்த ஏற்பாடு போலிருக்கிறது!!

இவ்விடத்தைச் சுற்றி, பெரிய சுவர்கள் மதிலாக இருக்கின்றன. இதற்கு வெளியே வசிக்கும் மக்கள் சிலர், இரவு நேரத்தில் இங்கிருந்து குழல் ஓசையும், நடனமாடும் போது எழும்பும் தாளத்துடன் சேர்ந்த சலங்கை ஒலியும் கேட்பதாகச் சொல்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும், அந்திநேரத்தின் ஆரத்தி நேர மணியின் போது, தத்தமது இல்லங்களின் ஜன்னல்களை அடைத்து விடுகின்றனராம். என்ன ஒரு க்ருஷ்ண ப்ரேமை!

இந்த ஓசைகளைக் கேட்பதற்காகவேனும், அடியேன் குடில், அருகே அமைந்திருக்கலாமே..
இப்படி எத்தனை எத்தனையோ எண்ணக் குவியல்களை சுமந்து கொண்டு, வெளியே வரத்துவங்கிய போது, சில சமாதிகள்(?) தென்பட்டன..

அது என்னவென்று விசாரித்த போது, இந்த நிதிவனத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கிறோம் என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கிய சில நபர்களுக்குக் கிடைத்த பரிசு அது என்பதும் தெரிய வந்தது. உடன் வந்த வழிகாட்டி உபரியாக ஒன்றும் சொன்னார்.. இங்கே ஒரு வடநாட்டவர் ஒரு நாள் இரவு தங்கி இருந்திருக்கிறார்.. அடுத்த நாள் காலை வந்து பார்த்த போது, அவரது உயிரற்ற உடலருகே ஒரு காகிதத்தில் அவர் எழுதியிருந்தது காணக் கிடைத்தது…;
“ஹா…யஹாங்…” (ஆம், இங்கே…)

எங்கும் நிறைந்தவனை, ஆராய நாம் யார்?..

எம்பெருமானே, அடியேனுக்கு இது போன்ற கு(இ)ருட்டு எண்ணங்கள் உன் விஷயத்தில் குறுக்கே புகாமல், நீயே, உவந்து அடியேனை வந்து ஆட்கொள்ள வேணுமே….
செய்வாயா?… செய்வான்…

இந்த த்ருட விஸ்வாஸமே சாதித்துக் கொடுக்குமே…

(ராதேக்ருஷ்ணா..)

இனி, அவன் அனுஸ்மரணையே, நித்ய யாத்திரையாய், இந்த ஆன்மா செய்யட்டும்..
இந்த பதிவுகளில், அடியேனது சிற்றறிவிற்கேற்ப, என்ன என்ன அனுபவித்தேனோ, அதையே பகிர்ந்தேன். குற்றம், குறை இருப்பின் பெரியோர்கள் பொறுத்தருள்க.. மற்றபடி, அடியேனோடு, பெருந்தன்மை மிகுதியால் கூடியிருந்து குளிர்ந்த ஒவ்வொருவருக்கும், அடியேனது க்ருதக்ஞையைத் தெரிவித்துக் கொள்கிறேன்… ராதேக்ருஷ்ணா.. அடியேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s